உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்: ஈரோடு

உள்ளூர் வர்த்தக செய்திகள்: ஈரோடு

* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 61 மூட்டை எள் வரத்தா-னது. ஒரு கிலோ கருப்பு எள், 100-09 - 147.59 ரூபாய், சிவப்பு ரகம், 12௨ ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 4,510 கிலோ எள், 5.96 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 17,213 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 30.99 - 36.99 ரூபாய், கசங்கல் காய், 41.60 - 47.63 ரூபாய் என, 5,971 கிலோ தேங்காய், 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு விற்பனை நடந்தது. பச்சை பாக்கு காய் கிலோ, 65 - 70 ரூபாய், காய்ந்த பாக்கு காய் கிலோ, 205 - 212 ரூபாய், நாட்டு பாக்கு கிலோ, 204 - 215 ரூபாய், சாளி பாக்கு கிலோ, 412 - 416 ரூபாய், பாக்கு பழம் கிலா, 74.30 - 80.10 ரூபாய் என, 34 ஆயிரம் கிலோ பாக்கு, 37.38 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 1,400 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தா-னது. ஒரு மூட்டை, 1,270 - 1,380 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,290 - 1,390 ரூபாய்; அச்சு வெல்லம், 100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,440 - 1,470 ரூபாய்க்கு விலை போனது. * கோபி அருகே மொடச்சூரில் நேற்று வாரச்சந்தை நடந்தது. இதில் துவரம் பருப்பு (கிலோவில்), குண்டு உளுந்து, பச்சை-பயிர், பாசிப்பருப்பு, தலா, 140 ரூபாய்க்கு விற்பனையானது. கொள்ளு, 80 ரூபாய், தட்டைப்பயிர், 120, மல்லி, 180, பொட்-டுக்கடலை, 120, சீரகம், 400, கடுகு, 140, கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 120, புளி, 200, பூண்டு, 180, வரமிளகாய், 250 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, 65 டன், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்-கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை ஒரே விலையாக, 2,850 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,760 ரூபாய் முதல், 2,820 ரூபாய் வரை ஏலம்போனது. வரத்தான, 1,356 மூட்டைகளை, 38 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்-துக்கு, 2,033 மூட்டைகளில், 1.73 லட்சம் கிலோ கொப்பரையை, விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 138 ரூபாய் முதல் 150 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 40.89 ரூபாய் முதல் 143 ரூபாய் வரை, 2.46 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்-தது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 38 ரூபாய், நேந்திரன், 12 ரூபாய்க்கும் விற்பனை-யானது. செவ்வாழைத்தார், 800 ரூபாய், தேன்வாழை, 600, பூவன், 560, ரஸ்த்தாளி, 650, மொந்தன், 260, ரொபஸ்டா, 510, பச்சை நாடான், 440 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,600 வாழைத்தார்கள், 8.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், ஒன்பது ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 12 ஆயிரத்து 790 தேங்காய், 2.32 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 12,760 தேங்காயை விவசா-யிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 47.15 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 36.50 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேங்காய் பருப்பு, 915 கிலோ வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 141.35 ரூபாய், குறைந்தபட்சம், 100 ரூபாய்க்கும் ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை