உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 40 ரூபாய், நேந்திரன், 65 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 520, தேன்வாழை, 600, செவ்-வாழை, 1,300, ரஸ்த்தாளி, 610, பச்சைநாடான், 450, ரொபஸ்டா, 460, மொந்தன், 360 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 6,650 வாழைத்தார்களும், 12.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் பத்து ரூபாய் முதல், 34 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 16 ஆயி-ரத்து, 670 தேங்காய்களும், 3.70 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 60 மூட்டை கொண்டு வந்தனர். நிலக்க-டலை காய்ந்தது முதல் தரம், 68 ரூபாய் முதல், 70.30 ரூபாய்; இரண்டாம் ரகம், 62 ரூபாய் முதல், 67 ரூபாய் வரை, ௧.௪௭ லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். * சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த எள் ஏலத்-துக்கு, 341 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 161.59 ரூபாய் முதல், 178.11 ரூபாய்; சிவப்பு ரகம், 121.62 ரூபாய் முதல், 13௨ ரூபாய்; வெள்ளை ரகம், 102.29 ரூபாய் முதல், 13௧ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 25,552 கிலோ எள், 32.௭௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 21,329 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 43.91 ரூபாய் முதல், 61.60 ரூபாய் வரை, 6,948 கிலோ தேங்காய், 3.௭௫ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 3,135 மூட்-டைகளில், ௧ய௨௮ லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 128.18 ரூபாய் முதல் 150.15 ரூபாய்; இரண்டாம் தரம், 3௭ ரூபாய் முதல், 138.05 ரூபாய் வரை, ௧.75 கோடி ரூபாய்க்கு விற்-றது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,200 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தா-னது. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,360 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,100 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,310 ரூபாய் முதல், 1,440 ரூபாய்; அச்சு வெல்லம், 350 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 ரூபாய் முதல், 1,450 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை விலையில் மாற்றம் இல்லை. உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் அதிகரித்தது; அச்சு வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை