உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கதலி ரக வாழை கிலோ, 20 முதல் 42 ரூபாய்; நேந்திரம் கிலோ, 23 முதல் 45 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 80 முதல் 520 ரூபாய்; செவ்வாழை தார், 100 முதல் 650 ரூபாய்; ரஸ்தாளி தார், 150 முதல் 580 ரூபாய்; ஜி-9 ரகம், 120 முதல் 600 ரூபாய்; தேன்வாழை, 50 முதல் 450 ரூபாய்; மொந்தன் தார், 20 முதல் 300 ரூபாய்க்கு விலை போனது. வரத்தான, ௫,௧௦௨ தார்கள், 4.96 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* சித்தோடு வெல்லம் சொசைட்டிக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,310 முதல், 1,420 ரூபாய் வரை விற்றது. உருண்டை வெல்லம், 2,100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,440 ரூபாய்; அச்சு வெல்லம், 150 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,510 முதல், 1,640 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய், அச்சு வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாய் விலை கூடியது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 40 ரூபாய், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்-றது. பூவன் தார், 600 ரூபாய், தேன்வாழை, 610, செவ்வாழை, 700, ரஸ்த்தாளி, 510, பச்சைநாடான், 420, ரொபஸ்டா, 360, மொந்தன், 230 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 6,027 வாழைத்தார்களும், 10.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 14 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை விற்றது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. துவரம் பருப்பு (கிலோ), 110 ரூபாய், குண்டு உளுந்து மற்றும் பாசிப்பருப்பு, தலா 120 ரூபாய், பச்சை பயிர், 130, கொள்ளு, 60, தட்டைப்-பயிர், கடுகு, கடலைப்பருப்பு தலா 100 ரூபாய், மிளகு, 850 ரூபாய், சீரகம், 340, வெந்தயம், 120, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 110, புளி, 140 முதல், 220 ரூபாய் வரை விற்றது. பூண்டு, 80 முதல், 140 ரூபாய்க்கும் விலை போனது. * பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 3,381 மூட்டைகளில், ௧.௩௦ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 16௧ ரூபாய் முதல் 17௭ ரூபாய்; இரண்டாம் தரம், 35.79 ரூபாய் முதல் 17௪ ரூபாய் வரை, ௨.௧௦ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 124 கிலோ வரத்தானது. காய்ந்த பாக்கு காய், கிலோ, 142 - 154 ரூபாய்க்கு விற்றது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நேற்று நடந்தது. 40 மூட்டைகளில், 2,846 கிலோ எள் வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 185.09 ரூபாய், குறைந்தபட்சம், 116.70 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 1,213 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 111 ரூபாய் முதல், 175.35 ரூபாய் வரை விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி