உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 7,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 40 கன்றுத 23,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள்; 22,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள்; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50 கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.பருவ மழை பெய்து வருவதால் பசுந்தீவனம் கிடைக்கிறது. உழவுப்பணி துவங்கி உள்ளதால் மாடுகள் குறைவாகவே வரத்தானதால் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அதேசமயம், 90 சதவீத கால்நடைகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 62 ரூபாய், நேந்திரன், 46 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 850, தேன்வாழை, 740, செவ்வாழை, 1,150, ரஸ்த்தாளி, 690, மொந்தன், 530, ரொபஸ்டா, 480, பச்சைநாடான், 540 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வரத்தான, 2,998 வாழைத்தார்களும், 8.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 21 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 23௨ ரூபாய், குறைந்தபட்சம், 187.87 ரூபாய் என, ௧0.48 குவிண்டால் தேங்காய் பருப்பு, 2.29 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. பவானி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 1,136 காய் கொண்டு வந்தனர். ஒரு காய், 20 ரூபாய் முதல் 27.50 ரூபாய் வரை விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ