உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 22 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 211.29 ரூபாய், குறைந்தபட்சம், 172.19 ரூபாய் என, 10.98 குவிண்டால் தேங்காய் பருப்பு, 1.97 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,240 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-520, காக்கடா-450, செண்டு மல்லி-120, கோழி கொண்டை- 160, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்-1,050, சம்பங்கி-300, அரளி-200, துளசி-60, செவ்வந்தி- 360 ரூபாய்க்கும் விற்பனையானது.* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 900 காய்கள் வரத்தானது. ஒரு காய், 24.10 - 36.25 ரூபாய்க்கு விலை போனது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 885 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 60.69 முதல், 71.39 ரூபாய் வரை, 27,289 கிலோ நிலக்கடலை, 17.39 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 35,000 தேங்காய் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 63.69 முதல், 67.36 ரூபாய்; பச்சை தேங்காய், 47.10 முதல், 59.10 ரூபாய்; தண்ணீர் வற்றிய காய், 103.09 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 14,434 கிலோ தேங்காய், 9.௩௨ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 110 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 200 முதல் 251.09 ரூபாய்; இரண்டாம் தரம், 100 ரூபாய் முதல் 196 ரூபாய் வரை, 2,487 கிலோ, 5.௧௧ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முழுமையான கலப்பின மாடுகளும் விற்பனைக்கு வரத்தானது. ஓணம் பண்டிகையால் கேரளா வியாபாரிகள், விவசாயிகள் வரவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வந்தனர். இதனால், 90 சதவீத கால்நடை விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ