உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில்பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டுஈரோடு, அக். 16-ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 55க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றால் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் டிக்கெட் வழங்கும் பகுதி அருகே, பூட்டும் வசதியுடன் கூடிய பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. டெண்டர் அடிப்படையில் தனியாருக்கு இந்த அறை விடப்படுகிறது. பொருட்களுக்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகமே நிர்ணயித்து அறிவிப்பையும் வெளியிடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெண்டர் எடுத்த தனியாரின் அவகாசம் நிறைவு பெற்று விட்டது. இதனால் அறையை பூட்டி சாவியை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து சென்று விட்டார். அறையை உடனடியாக திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: டெண்டர் காலம் முடிந்ததால் ஒரு மாதமாக பாதுகாப்பு அறை பூட்டி கிடக்கிறது. அறை நடத்துவதற்கான டெண்டரை விரைந்து முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
அக் 17, 2024 16:34

டெண்டர் எடுத்த தனியாரின் அவகாசம் நிறைவு பெற்று விட்டது. இதனால் அறையை பூட்டி சாவியை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு விட்டால் போதும்னு ஓடிவிட்டார் அடுத்த டெண்டர் விட குஜராத்தி எவனாவதுவரனும் பேரம் படியனும்னு எவ்ளோ இருக்கு அதுக்குள்ளே அவசர பட்டா எப்டீ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை