உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்தில் சிக்கிய லாரி; போக்குவரத்து பாதிப்பு

பாலத்தில் சிக்கிய லாரி; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களாக வடிகாலில் போடப்பட்டிருந்த மூடி பல இடங்களில் உடைது காணப்பட்டது. இதை சரிசெய்ய வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணியளவில் காங்கேயத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி, காளைமாட்டு சிலை நோக்கி செல்வதற்காக ரயில்வே நுழைவு பாலத்தில் சென்றது. நுழைவு பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தில் சக்கரம் சிக்காமல் இருக்க அதன் டிரைவர் இடதுபுறமாக திருப்பினார். அப்போது சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலில் லாரியின் சக்கரம் இறங்கி சிக்கி கொண்டது.ஏற்கனவே குறுகலான சாலையாக இருப்பதால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதனால் கொல்லம்பாளையத்தில் இருந்து காளைமாட்டு சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாடார்மேடு வழியாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் சாஸ்திரிநகர், சென்னிமலைரோடு வழியாக திருப்பி விடப்பட்டன.கிரேன் உதவியுடன் லாரி தூக்கப்பட்டு சாலையில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது. இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி