மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
01-Apr-2025
பவானி:ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாகவும், இது சம்பந்தமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, கைது செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், பவானி அருகே ஜீவா நகர், குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த சரவணன், 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், வெள்ளை நிற துண்டு சீட்டில் எண்கள் எழுதப்பட்டு, மொபைல்போன்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் குரூப் மூலம், ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் லாட்டரி சீட்டுகளை விற்றதாக, 8.56 லட்சம் ரூபாய், ஒரு மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
01-Apr-2025