உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பவானி, ஆப்பக்கூடல் போலீசார் நேற்று மதியம் அத்தாணி, கைகாட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அங்கே இருந்த இருவர் தப்பி ஓடினர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி பிடித்ததில், பச்சாம்பாளையத்தை சேர்ந்த சேகர், 47, அந்தியூரை சேர்ந்த சாமி என்பது தெரியவந்தது. சாமி தப்பினார். சேகரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ