உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்

இலவச பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்

வெள்ளகோவில்வெள்ளகோவிலை அடுத்த சிவநாதபுரம், தீத்தாம்பாளையம், சேரன்நகர், நடேசன் நகர், பழனிச்சாமி நகர் பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், சில மாதங்களுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால், மா.கம்யூ., சார்பில் வெள்ளகோவில் வி.ஏ.ஓ., அலுவலகத்தை, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலவருவாய் ஆய்வாளர் சுந்தரி பேச்சுவார்த்தை நடத்தினார்.மனு குறித்து உயரதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று கூறவே, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை