மேலும் செய்திகள்
தலை துண்டான நிலையில் ஆண் சடலம்
18-Nov-2024
ஈரோடு, டிச. 4-ஈரோடு, ரயில்வே மருத்துவமனை அருகே, ரயில்வே பணிமனைக்கு செல்லும் குறுக்கு வழியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், 25 அடி உயரத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று துாக்கில் தொங்கியது. சூரம்பட்டி போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுசீல் என்பது தெரிய வந்தது. அவரின் மொபைலில் கடைசியாக பேசிய நபரிடம் தொடர்பு கொண்டதில் இது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
18-Nov-2024