உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டையூர் வனத்தில் ஆண் யானை இறப்பு

குட்டையூர் வனத்தில் ஆண் யானை இறப்பு

அந்தியூர் அந்தியூர் அருகே பர்கூர் மலை தட்டக்கரை வனச்சரகத்தில், குட்டையூர் வனப்பகுதியில் ஒரு ஆண் யானை ஒன்று மர்மமாக இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தட்டக்கரை வனத்துறையினர் நேற்று சென்றனர். ஆய்வில் யானை இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து சத்தி வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தகவல் தந்தனர். யானையின் உடற்கூறு பரிசோதனை இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.70 வயதில் சுவர் ஏறி குதித்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை