உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் திருட முயன்றவர் கைது

கோவிலில் திருட முயன்றவர் கைது

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர் பிரிவு அருகே, காளியம்மன் கோவில் உள்ளது. பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கோவில் சுவரில் ஏறி, நேற்று காலை 8:30 மணியளவில் உள்ளே குதிக்க முயற்சி செய்தனர். இதைப்பார்த்த மக்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார், இருவரிடமும் விசாரித்தனர். தேனி, கம்பம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விமல்ராஜ், 20; மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பதும் தெரிந்தது. விமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை