வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் உள்ள வளையக்கார தெருவை சேர்ந்தவர் செரீப் முகமது, 28; இவரது வீட்டில் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, மூன்று பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்த ரவி, 50, என்பவர், செரீப் முகமது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் ரவியை கைது செய்து, நகையை மீட்டனர்.