உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகுதிநேர வேலை ஆசை காட்டி பெண்ணிடம் சமூக வலைதளத்தில் பணம் பறித்தவர் கைது

பகுதிநேர வேலை ஆசை காட்டி பெண்ணிடம் சமூக வலைதளத்தில் பணம் பறித்தவர் கைது

பகுதிநேர வேலை ஆசை காட்டி பெண்ணிடம்சமூக வலைதளத்தில் பணம் பறித்தவர் கைதுஈரோடு, டிச. 10-கோபி, தண்ணீர்பந்தல் புதுாரை சேர்ந்தவர் சுபத்ரா, 32; பட்டதாரியான இவர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். சமூக வலைதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஊதியமாக, 9,888 ரூபாய் வழங்கப்பட்டது. மீண்டும் பணி தேவையெனில், ௫.௨௯ லட்சம் ரூபாய் செலுத்துமாறு தகவல் வந்தது. இதை நம்பி சமூக வலைதளத்தில் வந்த தகவல்படி கேரளாவை சேர்ந்த பழங்குற்றவாளி பாத்திமா பீவி என்பவரின் வங்கி கணக்குக்கு, தொகையை அனுப்பினார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. மாறாக சமூக வலைதளத்தில் வேலை அளித்த நபர், அதிலிருந்து விலகினார். சந்தேகமடைந்த சுபத்ரா ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.பாத்திமா பீவியிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உபைத், பாத்திமா பீவியிடம் இருந்து பணத்தை பெற்றது தெரியவந்தது. இதனால் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் எர்ணாகுளம், கோட்டபுரம், ஆலகோட்டை சேர்ந்த உபைத்தை, 41, போலீசார் நேற்று பிடித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை