1,200 கிலோ குட்கா கடத்தியவர் கைது
அந்தியூர், பர்கூர்மலை ஊசிமலை-தட்டகரை ரோட்டில், கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவிலிருந்து மஹிந்திரா தோஸ்த் வாகனத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன் குமார், 25, வந்தார். வாகனத்தில், 1,200 கிலோ குட்கா பொருள் இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்துக்கு கடத்தி செல்வது தெரிந்தது. அவரை கைது செய்து, வாகனத்துடன் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.