உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈச்சர் மினி லாரியை திருடியவர் கைது

ஈச்சர் மினி லாரியை திருடியவர் கைது

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 35. கடந்த 2024 டிச.,ல், இவருக்கு சொந்தமான ஈச்சர் மினி லாரி, வீட்டின் முன் நிறுத்தி இருந்த போது, மர்ம நபர்களால் திருடப்பட்டது. தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 'சிசிடிவி' காட்சி அடிப்படையில், உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், ஈச்சர் வாகனத்தை திருடிய தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை