புத்தாண்டு தினத்தில் நகை கடையில் திருடியவர் கைது
ஈரோடு, ஈரோடு, நேதாஜி சாலையில் உள்ளது அம்மன் ஜூவல்லர்ஸ். இங்கு கடந்த ஜன., 1ல் வந்த ஆசாமி, நகை வாங்குவது போல் விபரங்களை கேட்டு பல்வேறு நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் சென்றார். இரவில் நகைகளை சரிபார்த்தபோது இரண்டு பவுன் தங்க காசு மாயமானது தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் ஆசாமி லவட்டி சென்றது தெரிய வந்தது. புகாரின்படி டவுன் போலீசார் விசாரித்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரை சேர்ந்த முகமது அலி, 43, கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி முருகன் நகரில் வசித்தவரை போலீசார் கைது செய்து, தங்க காசை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.