காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
காங்கேயம், ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின்படி, திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார், முத்துார் அருகே காங்கேயம் ரோட்டில், வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த ஒரு காரில், ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிந்தது. காரை ஓட்டி வந்த வெள்ளகோவில், அத்தாம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், 52; வேலம்பாளையம், மங்கலப்பட்டி பகுதிகளில் மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, வட மாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்து, காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.