உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சத்தியமங்கலம்;சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சத்தியமங்கலம் அருகே செண்பகபுதுாரை சேர்ந்தவர் ராஜன், 41, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் எல்.பி.பி., வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வாய்க்காலில் இறங்கி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால், தீயணைப்பு வீரர்கள் திரும்பினர். இந்நிலையில் நேற்று மதியம் ராஜனின் உடல் கரை ஒதுங்கியது. சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை