மேலும் செய்திகள்
சத்தியில் செவிலியர் மாயம்
19-Jun-2025
சத்தியமங்கலம், :சத்தியமங்கலம் அருகே வனப்பகுதி சாலையோரத்தில், யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே வனப்பகுதி சாலையோரம், கடந்த, ௧3ம் தேதி ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.அப்போது காரில் சென்ற ஒருவர், யானைக்கு வாழைப்பழம் சாப்பிட கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில் சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கோவை மாவட்டம் அன்னுாரை சேர்ந்த கோபால கிருஷ்ணன், 58, என தெரிய வந்தது. அவரை வரவழைத்த வனத்துறையினர், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வன விலங்குகளுக்கு இதுபோல் உணவளிப்பது குற்றம் என்று அறிவுறுத்தி அனுப்பினர்.
19-Jun-2025