மேலும் செய்திகள்
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
29-May-2025
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி, வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மைதீன் பாட்சா, 20; ஜவுளிக்கடை தொழிலாளி. இவருக்கு, 15 வயது சிறுமியின் தாய் அறிமுகமானார். அதன் அடிப்படையில் சிறுமியிடம் பழகியவர், 2019 ஜூலை, 26ல் சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தார்.இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, உரிய திருமண வயதை எட்டாமல் கர்ப்பமானது தெரிந்தது. மருத்துவ துறையினர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து, 2020ல் கைது செய்தனர். ஜாமினில் மைதீன் பாட்சா வெளியில் வந்தார். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். இதில் மைதீன் பாட்சாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.
29-May-2025