கர்நாடகா போலீசாரிடம் இருந்து தப்பியவர் கைது
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்-தவர் கரண், 26; இவர் மீது கர்நாடக மாநிலம் சுள்-ளியா போலீசார், 2022ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், கடந்த, 5ம் தேதி பவானிசாகர் இலங்கைத் தமிழர் முகாமில் வைத்து கரணை கைது செய்தனர்.சுள்ளியா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற நிலையில், 6ம் தேதி மருத்துவ பரிசோத-னைக்காக கர்நாடக மாநில அரசு மருத்துவம-னைக்கு அழைத்து சென்றனர். அப்போது கரண் தப்பியோடி விட்டார். கர்நாடக மாநில போலீசார் அவரை தேடி வந்த நிலையில், பவானிசாகர் இலங்கைத் தமிழர் முகாமில் பதுங்கியிருந்தவரை, சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான பவானிசாகர் போலீசார், நேற்று கைது செய்து, கர்நாடக மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்