வளவாநல்லுாரில் மாங்கனி திருவிழா
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த குங்காருபாளையம் அருகே வளவாநல்லுாரில், தையல்நாயகி அம்மை உடனமர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர், 1,000 ஆண்டுகளுக்கு முன் சுயம்பாக தோன்றியது. இக்கோவிலில் திருமணம் விரைவில் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் ஆண்டு தோறும் ஆனி மாத பவுர்ணமி நாளில் மாங்கனி திருவிழா நடக்கிறது. இந்த வகையில் கோவிலில் நேற்று மாங்கனி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதில் காங்கேயம், ஊதியூர் மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.