உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாம்பழம் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மாம்பழம் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

ஈரோடு :ஈரோடு பகுதியில் மார்ச் இறுதி முதல் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து வரத்தாகிறது. இதுபற்றி மொத்த வியாபாரிகள் கூறியதாவது: சீசனுக்கு அப்பால், ஈரோடு பகுதிக்கு ஒன்று முதல் 2 லோடு வரை மாம்பழங்கள் வரத்தாகும். கடந்த மார்ச் இறுதி முதல், 2 முதல் 4 லோடு வரை வரத்தானது. தற்போது 6 முதல் 8 லோடுக்கு மேல் தினமும் வருகிறது.செந்துாரம் கிலோ, 80 ரூபாய், மல்கோவா - 100 ரூபாய், பங்கனப்பள்ளி - 100 ரூபாய், இமாம் பசந்த் - 160 ரூபாய்க்கு விற்கிறது. தவிர நாட்டு பழங்களாக கிலோ, 60 முதல், 100 ரூபாய்க்குள் விற்பனையாகிறது. ஜூன் மாதம் வரை வரத்து அதிகமாக இருக்கும். இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் அதிகமாக வரத்தாகிறது. மேலும் அளவு அதிகரித்தால் விளைச்சல் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !