விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு
ஈரோடு: காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம், துரைசாமி நகரை சேர்ந்-தவர் குகன், 61; ஈரோடு, நேரு வீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த, 14ம் தேதி காலை வந்து தங்கினார். இரவு சாப்பிட்ட பின் அறைக்கு சென்றார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையில் இறந்து கிடந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.