உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் பள்ளத்தில் பாய்ந்ததில் மாஸ்டர் சாவு

பைக் பள்ளத்தில் பாய்ந்ததில் மாஸ்டர் சாவு

புன்செய்புளியம்பட்டி:கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் கரண்சந்த், 25; கோவை புரூக்பீல்டு உணவக சமையல் மாஸ்டர். நண்பரை பார்ப்பதற்காக யமஹா-200 பைக்கில் சத்தியமங்கலம் சென்றார். பிறகு கோவைக்கு திரும்பினார். சத்தி-புன்செய் புளியம்பட்டி தேசியநெடுஞ்சாலையில், விண்ணப்பள்ளி வளைவில் நேற்று முன் தினம் இரவு சென்றார். அதிவேகத்தில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த கரண் சந்த் மீட்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !