உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாதா தேர் திருவிழா

மாதா தேர் திருவிழா

தாராபுரம், தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில், வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா நேற்றிரவு விமரிசையாக நடந்தது. இதையொட்டி பங்குத்தந்தை ஜார்ஜ் தனசேகர் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பின் ஆலய வளாகத்தில் இருந்து கிளம்பிய தேர் பவனியில், மைக்கேல் அதிதுாதர், வேளாங்கண்ணி மாதா சொரூபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றது. இதில், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை