உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மர்ம விலங்கை கண்டறிய கேமரா பொருத்தம்

மர்ம விலங்கை கண்டறிய கேமரா பொருத்தம்

மர்ம விலங்கை கண்டறிய கேமரா பொருத்தம்சென்னிமலை, அக். 17--சென்னிமலை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசு, குட்டக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி குமாரசாமி, 58; இவரின் ஆட்டுப்பட்டியில் கடந்த ஆறு மாதத்தில் ஏழு ஆடுகள் காணாமல் போயின. நேற்று முன்தினம் குமாரசாமி ஆட்டுப்பட்டி அருகில் மர்ம விலங்கு நடந்து சென்றதற்கான கால் தடயம் பதிவாகி இருந்தது. சிறுத்தையின் கால் தடமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு ஆய்வு செய்த வனத்துறையினர், குமாரசாமி தோட்டத்து பகுதியில் இரண்டு தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை நேற்று பொருத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ