உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தலில் பயன்படுத்திய பொருட்கள்

தேர்தலில் பயன்படுத்திய பொருட்கள்

கோபி, : கோபி சட்டசபை தேர்தலில், பயன்படுத்திய எழுது பொருட்கள், கோபி தாலுகா அலுவலகத்தில் பிரிக்கும் பணி நேற்று நடந்தது.கோபி சட்டசபை தொகுதியில், கடந்த ஏப்.,23ல் ஓட்டுப்பதிவு நடந்தது. அதையடுத்து கடந்த, 4ல், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின் போது பயன்படுத்த, 29 மண்டலம் வாரியாக பேனா, இங்க், பென்சில், ரப்பர், நுால்கண்டு, அரக்கு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கவர், டோக்கன், பை என, 60க்கும் மேற்பட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் பணி முடிந்ததால், அந்த எழுது பொருட்கள் அனைத்தும், கோபி தாலுகா அலுவலகத்தில், ரகம் வாரியாக பிரிக்கும் பணி நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை