மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
டி.என்.பாளையம்: அந்தியூர் சட்டசபை தொகுதி, டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட கொண்டையம் பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை சிறப்பு முகாம் நேற்று, கள்ளிப்பட்டியில் உள்ள கொண்டையம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் பாலு, வெங்கடேஸ்வரன், துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.