உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வு மருந்து கிடங்கு அலுவலர் கூட்டம்

ஓய்வு மருந்து கிடங்கு அலுவலர் கூட்டம்

ஈரோடு: ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் துரைசாமி வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.முதல்வர் மருந்தகங்களை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர் அனைவரையும், ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர் நலச்சங்க உறுப்பினராக இணைக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் உள்ள முரண்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை