உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈடிசியா சார்பில் கூட்டம்

ஈடிசியா சார்பில் கூட்டம்

ஈரோடு, ஈரோட்டில் வரும், 14, ௧௫ம் தேதி நடக்கவுள்ள, தமிழ்நாடு வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு கூட்டத்துக்கான வழிகாட்டுதல் கூட்டம், ஈரோடு ஈடிசியா தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர் திருமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.சிறப்பு அழைப்பாளராக பிரைய்ன் ஸ்டார்ம் சொல்யூசன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகன் பங்கேற்றார்.நிறுவன தயாரிப்புகளை காட்சிப்படுத்துதல், வழிகாட்டுதல், நுகர்வோரின் தேவைகளை அறிந்துகொள்ளுதல், தேவையான ஆவணங்கள், சான்றிதழ் தொடர்பான தகவல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.கூட்டத்தில் ஈடிசியா முன்னாள் தலைவர்கள் வெங்கடேஸ், துணைத் தலைவர் ராம்பிரகாஷ், இணை செயலாளர் சக்திவேல், ஈடிசியா பொது மேலாளர் கிளமெண்ட் ராஜ் மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஈடிசியா செயலாளர் சரவணபாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !