உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெகா சைஸில் வந்த ரோகு, கட்லா மீன்

மெகா சைஸில் வந்த ரோகு, கட்லா மீன்

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, மீன்கள் நேற்று வரத்தானது. வழக்கமாக வரும் ரோகு, கட்லா மீன்கள் அதிகபட்சம், 2 கிலோ எடையில் இருக்கும். நேற்று வழக்கத்துக்கு மாறாக, 10 கிலோ எடையில் மூன்று ரோகு மீன்கள் விற்பனைக்கு வந்தது. கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது. இதேபோல், 11 கிலோவில் மூன்று கட்லா மீன் வந்தது. கிலோ, 270 ரூபாய்க்கு விலை போனது. நேற்று முகூர்த்த தினம் என்பதால் மீன் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், 3.5 டன் மீன்கள் மட்டுமே வந்தது. வஞ்சிரம், வெள்ளை வாவல் தலா கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ