மன வளர்ச்சி குன்றியவர் பலி
ஈரோடு, மொடக்குறிச்சி விளக்கேத்தி காகம் மேற்கு மின்னபாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன்,43; மன வளர்ச்சி குன்றியவர். பெற்றோர் இல்லை. உறவினர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 25 மதியம் சாமிநாத புரத்தில் உள்ள தோட்டத்தில் களை எடுக்கும் வேலையில் ஈடுபட்ட போது, அங்கிருந்த பண்ணை குட்டையில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். உறவினர்கள் சென்று பார்த்த போது கருப்பண்ணன் இறந்தது தெரியவந்தது. சிவகிரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.