வணிகர்கள் சங்க கூட்டம்
வணிகர்கள் சங்க கூட்டம்பவானி, நவ. 12-அம்மாபேட்டை ஒன்றிய வணிகர் சங்க கூட்டம், ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட துணைத் தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேசினார். ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, துணை தலைவர் மாதேஸ்வரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.