அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் அமைச்சர் ஆய்வு
பவானிசாகர்: பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 198 அரசு துறைகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, இங்கு நேற்று வந்தார். பயிற்சி நிலை-யத்தில் வகுப்பறை, கலையரங்கம், விளையாட்டு அரங்கம், உண-வுக்கூடம், நுாலகம் மற்றும் சமையலறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பயிற்சியில் இருந்த அரசு அலுவலர்க-ளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது டி.ஆர்.ஓ., சாந்த-குமார், அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் லதா உள்-ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு தற்-போது, 66வது பேட்ச் பயிற்சி நடந்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 183 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களாக பணியில் இருக்கும் போது இறந்தவர்களின் வாரிசுகள், 4,000 பேருக்கு கல்வி அடிப்ப-டையில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மனித வள மேலாண்மை துறையை பொறுத்த வரை ஆண்டுக்கு, 75 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப காலி பணியிடங்களை பொறுத்து பணி வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.