உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், 325 முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அன்றாடம் அணுகும் அரசுத் துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக தாராபுரம் ஆர்.டி.ஓ., சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.