உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

பவானி: சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரி யில், வீட்டுவசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, தலைமையில், துாய்மை பணி-யாளர் நலவாரிய தலைவர் ஆறுசாமி மற்றும் துாய்மை பணியா-ளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 11 பேருக்கு, 32.75 லட்சம் ரூபாய் மதிப்பில், விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை, 113 நபர்களுக்கு, 2.12 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 134 நபர்களுக்கு, 35.65 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !