உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் கடை மூடப்படும் மக்களிடம் எம்.எல்.ஏ., உறுதி

டாஸ்மாக் கடை மூடப்படும் மக்களிடம் எம்.எல்.ஏ., உறுதி

பவானி:சித்தோட்டில் ஆவின் பால் பண்ணை எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. போதையில் சாலையில் திடீரென புகுவதால், சாலை விபத்தும் தொடர் கதையாகி விட்டது. கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். சித்தோடு போலீசார் மற்றும் ஈரோடு மேற்கு த.வெ.க., எம்.எல்.ஏ., ஆனந்த மோகன் ஆகியோர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும்' என எம்.எல்.ஏ., கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை