மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் மாற்றம்
ஈரோடு:மொடக்குறிச்சி தொகுதி, தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் எதிர்பார்த்திருந்த தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரசாரத்திலும் முழுமையாக ஈடுபடாமல் ஒதுங்கி விட்டனர். தொகுதி தேர்தல் பொறுப்பாளராக தி.மு.க., மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு, ஈரோடு எம்.பி., பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் மேயர் மல்லிகா, ஈராடு கிழக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தி.மு.க.,விலும் பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.