உர விற்பனையாளர்களுக்கு நவீன பி.ஓ.எஸ்., கருவி
ஈரோடு,ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உர விற்பனையாளர்களுக்கு பி.ஓ.எஸ்., கருவி வழங்கப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண் துணை இயக்குனர் (உரம்) ரமேஷ் வழங்கினர்.ஈரோடு மவட்டத்தில், 168 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் முதற்கட்டமாக, 41 சங்க செயலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கருவி விவசாயிகளின் கே.சி.சி., கடன் அட்டைகளை கொண்டு பண பரிவர்த்தனை செய்ய ஏதுவாக உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கலைசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.