கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
காங்கேயம்:காங்கேயம் நகராட்சி வார்டுகளில், டெங்கு கொசு தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர், களப்பணி உதவியாளர் மற்றும் துாய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர், ஆயில் மில்கள், வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதி வணிக வளாகங்கள், கட்டுமான பணி நடக்கும் இடங்கள் மற்றும் உணவகங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக மூடி வைக்க அறிவுறுத்தினர்.