மேலும் செய்திகள்
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
24-Oct-2024
குழந்தைகளுடன் தாய் மாயம் சத்தியமங்கலம், நவ. 10-சத்தியமங்கலம் அருகே தோப்பூரை சேர்ந்த கணேஷ் மனைவி நிர்மலா. தம்பதிக்கு ஐந்து வயதில் மகன், ௨ வயதில் மகள் உள்ளனர். குழந்தைகளுடன் உறவினர் திருமணத்துக்கு, நிர்மலா கடந்த, 7ம் தேதி சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், நிர்மலாவின் தாய் புனிதா, சத்தி போலீசில் புகாரளித்தார். *ஈரோடு, பெரிய சேமூர், மாரிமுத்து மகள் பிரியதர்ஷினி, ௧௫; பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, ௪ம் தேதி திடீரென மாயமானார். இதேபோல் ஈரோடு, வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த மகேஷ் மகள் இளவரசி, 17; எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேலைக்கு சென்று வந்தார். இவரும் திடீரென மாயமாகியுள்ளார். இருவரின் பெற்றோர் புகாரின்படி, வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனர்.
24-Oct-2024