உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.

எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.

,பவானி: பவானி அருகே சின்னப்புலியூரில், தனியார் சர்க்-கரை ஆலைக்கு சொந்தமான எரிசாராய ஆலை உள்ளது. ஆலையால் ஏற்படும் மாசால், 30 கிரா-மங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ராம-கவுண்டன்வலசு பகுதிக்கு நேற்று வந்தார். மக்-களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார். எரிசாராய ஆலை போராட்டத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டு கொள்ளவில்லை. எனவே மாநில அரசு தலையிட வேண்டும். இதுதொடர்-பாக முதல்வரிடம் மனு கொடுத்து தீர்வு காண முயற்சிப்பேன் என்று, எம்.பி., உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை