உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மல்டி டேலண்ட் விருது மாணவனுக்கு பாராட்டு

மல்டி டேலண்ட் விருது மாணவனுக்கு பாராட்டு

ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் கார்த்திகுமார். திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்த கின்னஸ் உலக சாதனை சிலம்பம் நிகழ்ச்-சியில், 45 நிமிடங்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் விருது பெற்றார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நடந்த சிலம்பம், கராத்தே, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மாவட்ட, மாநில, தேசிய விருது பெற்றுள்ளார். இதை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் நடந்த நிகழ்வில், 'மல்டி டேலண்ட்' விருது வழங்கப்பட்டது. மாணவனை தலைமை ஆசிரியை சுமதி உள்ளிட்ட ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை