கட்டுமான நிறுவன காவலாளி கொலை: போதையில் சக தொழிலாளி ஆத்திரம்
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்தவர் ரவிசங்கர். பி.என்.சி., என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் அரச்-சலுார் அருகே அஞ்சுராம்பாளையத்தில், கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியை, இவரது நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இதற்காக அப்பகுதியில் தற்காலிக அறை அமைத்து கட்டுமான பொருட்களை வைத்து, 15 தொழிலாளர்கள் மூலம் பணி நடந்து வருகிறது. இங்கு அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, 65, காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த நிலையில், நேற்று காலை கொலை செய்யப்-பட்டு கிடந்தார். அரச்சலுார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்-டது தெரிந்தது.இது தொடர்பாக அதே நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபு-ரியும் அரியலுாரை சேர்ந்த செல்வம், 54, என்பவரை பிடித்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரமடைந்த செல்வம், கம்பியால் தாக்கியதில் பழனிச்சாமி இறந்ததும் தெரிய வந்தது. கொலையான பழனிச்சாமிக்கு மனைவி தனலட்சுமி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.