உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தை நடமாடும் நிலையில் ஆட்டை கடித்த மர்ம விலங்கு

சிறுத்தை நடமாடும் நிலையில் ஆட்டை கடித்த மர்ம விலங்கு

அந்தியூர்:அந்தியூர் அருகே ஈசப்பாறையில் செட்டியார் தோட்டத்தில் வசிப்பவர் சரவணன். இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம விலங்கு, கட்டி வைத்திருந்த ஆட்டை கடித்துள்ளது. ஆட்டின் அலறல் சத்தம், நாய்கள் குரைக்கும் சத்தத்தை கேட்டு, வீட்டிலிருந்து வெளியே சரவணன் வந்து பார்த்தார். அப்போது மர்ம விலங்கு ஆட்டை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. விலங்கு கடித்ததில் ஆட்டின் கழுத்து பகுதியில் ரத்தக்காயம் ஏற்பட்டது.அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் ஆட்டை பார்வையிட்டு, பதிவாகியிருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். ஆட்டை தாக்கியது சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இப்பகுதியில் முருகன் கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத்துறையினர் கூண்டும் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆட்டை மர்ம விலங்கு கடித்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !