மேலும் செய்திகள்
குமுதா பள்ளி மாணவியர் தமிழக அணிக்காக தேர்வு
20-Oct-2024
நம்பியூர் குமுதா பள்ளி மாணவன்கையுந்து பந்து போட்டியில் சாதனைநம்பியூர், நவ. 7--இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், 68வது தேசிய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கையுந்து பந்து போட்டிக்கான தேர்வு, அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது.இதில் குமுதா பள்ளியின் பிளஸ் 1 மாணவன் முஹம்மது ரபீஹ், தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவன் உத்தரபிரதேச மாநிலம், பெராலி நகரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில், தமிழ்நாடு அணிக்காக விளையாட உள்ளார்.தேசிய அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவனை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
20-Oct-2024