உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் காமராஜ் பள்ளி மாணவன் 585 மதிப்பெண் பெற்று அசத்தல்

நம்பியூர் காமராஜ் பள்ளி மாணவன் 585 மதிப்பெண் பெற்று அசத்தல்

நம்பியூர், பிளஸ் ௨ தேர்வில், நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன், 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி யாழினி, 564 எடுத்து இரண்டாமிடமும், மாணவன் ஜெயசூர்யா, 563 பெற்று பள்ளியில் மூன்றாமிடமும் பிடித்தனர்.தமிழ், இயற்பியல் பாடத்தில் இருவரும், தாவரவியல் பாடத்தில் ஒருவரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஆறு பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் நான்கு பேரும், வணிகவியல் பாடத்தில் மூன்று பேரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். பள்ளி தொடர்ந்து, 20வது ஆண்டாக பிளஸ் ௨ தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இந்த சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர், பெற்றோர்களுக்கு, பள்ளி தாளாளர் ஜவகர், இணை தாளாளர் சுமதி ஜவகர், பள்ளி முதல்வர் மைதிலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை